அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 10 ஜூன், 2010

சிந்தித்து பாருங்கள்... சிறகடிக்கும் சுகாதாரம்...!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம், நீலகிரியில் அதிகரித்து விட்டது; அதிகாரிகளின் நடவடிக்கை, மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

சுற்றுலா ஸ்தலங்களுக்கு தேசிய அளவில் பெயர் பெற்றது நீலகிரி மாவட்டம்; இதை மெய்ப்பிக்கும் வகையில், மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு, மே 1ம் தேதி உட்பட கண்காட்சி நாட்களில், நெரிசலில் சிக்கியது நகரம். கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் மேற்கொண்ட நடவடிக்கையால், இப்பொருட்களின் விற்பனை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காலப்போக்கில், அலட்சியம் செய்த அதிகாரிகளால், பிளாஸ்டிக் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. "பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டம்' என, அறிவிப்பு பலகைகளில் மட்டுமே வெளிப்படுகிறது. மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலர், வனப்பகுதிகளில் சமைத்து, உணவு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விட்டுச் செல்வதால், வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன; பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு பல விலங்குகள் இறந்த சம்பவமும் நடந்துள்ளன. இதைத் தடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாவட்ட நுழைவு வாயிலில், பிளாஸ்டிக் பொருட்களின் அபாயம் குறித்து "கண் திறக்க' வைத்த நடவடிக்கையும் தற்போது இல்லை; இதனால், சுற்றுலா ஸ்தலங்களிலும், வனப்பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவு குவிந்து கிடக்கிறது.







புழங்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மெத்தனப் போக்கு தான் காரணம்; "கவனிப்பில்' மயங்கும் அதிகாரிகள் சிலரால் தான் அதிகரித்து விட்டது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு குறித்து, மேடைகளில் முழங்கும் மத்திய, மாநில அமைச்சர்கள், பிளாஸ்டிக் புழக்கம் குறித்து வாய் திறப்பதில்லை; பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மக்களை வரவேற்கின்றன. இதேநிலை தொடரும் பட்சத்தில், பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டம், அதிகளவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் மாவட்டமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகம் களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் யோசிக்கணும்: பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க, பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொருட்களை வாங்கும் போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, காகிதம் மற்றும் துணியால் தயாரிக்கப்பட்ட பையில் வாங்க வேண்டும்; இதுபோன்ற நடைமுறையை தொடர்ந்து கடைபிடித்தால், கடையில் மேற்கொள்ளப்படும் விற்பனையும் கட்டுக்குள் வரும். நீலகிரியில் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது என்பதை,சுட்டெரிக்கும் வெயில், நிலச்சரிவு உட்பட சம்பவங்கள் அடிக்கடி நினைவுப்படுத்தி வருகின்றன. எனவே, மாவட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், வனப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்.

anbudan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக