அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

மூன்றாக பிரிகிறது மின்வாரியம்

தமிழ்நாடு மின்வாரியம் நாளை முதல் மூன்றாக பிரிக்கப்படுவதை அடுத்து, அன்று அனைத்து சொத்துக்களும் அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

இந்திய மின்வாரிய சட்டம் 2003ன்படி, மின்வாரியத்தில், முதலீடு, கடன் போன்ற வசதிகள் மூலம் மின்வாரியத்தை மேம்படுத்த, மூன்றாக பிரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒரிசா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், மேற்குவங்க மாநிலங்களில் மின்வாரியம் மூன்றாக பிரிக்கப்பட்டு விட்டன. 

தமிழக மின்வாரியத்தில், சென்னை தெற்கு, சென்னை வடக்கு, விழுப்புரம், வேலூர், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஒன்பது மண்டல அலுவலகங்கள் செயல்படுகின்றன. தமிழகம் முழுவதும் 1.50 கோடிக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. தமிழ்நாடு மின்வாரியத்தை, வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பிரிக்க தமிழக அரசு, சென்ற 19ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு டான் ஜெட்கோ, டான் டிரான்ஸ்கோ, தமிழ்நாடு மின்வாரிய ஹோல்டிங் கம்பெனி என மூன்றாக பிரிக்கப்படுகிறது. 

தமிழ்நாடு, "டான் ஜெட்கோ' நிர்வாகத்தின் கீழ், மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், சென்னையிலுள்ள அனல்மின் நிலையங்கள், குத்தாலம், வழுதூர், சென்னை பேசின் பிரிட்ஜ், திருமகோட்டை ஆகிய இடங்களில் உள்ள காஸ் மின் உற்பத்தி நிலையங்கள், மேட்டூர் உட்பட 39 நீர் மின்உற்பத்தி நிலையங்கள், 1.50 கோடிக்கு மேற்பட்ட வீடுகள் மின் இணைப்புகள் நிர்வகிக்கப்படுகின்றன.

"டான் டிரான்ஸ்கோ'வின் கீழ், 400, 230, 111, 66 கே.வி., துணை மின் நிலையங்கள், மின் கோபுரங்கள், மின் பாதைகள் ஆகியவை பராமரிக்கப்படும். 

மின்வாரிய, "ஹோல்டிங்' கம்பெனி சார்பில், பிற இரண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதுடன், இரண்டு நிறுவனங்களில் உள்ள பணியாளர்கள், சொத்துக்களை பிரிக்கும் பணியில் ஈடுபடுகிறது. பிற இரண்டு துறைகளும் முழுமையாக செயல்பட துவங்கியதும், மூன்றாண்டில் ஹோல்டிங் நிறுவனம் கலைக்கப்பட வாய்ப்புள்ளது. 

அரசின் மதிப்பீட்டின்படி, தற்போது, தமிழக மின்வாரியத்திடம் 68.68 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. நவம்பர் 1ம் தேதி, நிர்வாகம் முழுமையாக பிரித்து, செயல்படாவிட்டாலும், மின்வாரியத்தின் மொத்த சொத்துக்களான 68.68 கோடி ரூபாய் சொத்துக்களும் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. மின்வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களை, ஹோல்டிங் கம்பெனி, முத்தரப்பு கூட்டம் நடத்தி, மூன்று ஆண்டுகளுக்குள் பணியாளர்களை பிரித்து வழங்க வேண்டும். மின்வாரியம் பிரிக்கப்படுவதன் மூலம் கணக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதுடன், கூடுதல் வேலைவாய்ப்பு உருவாகவும் வாய்ப்புள்ளது.

 மண்டல மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வாரியம் மூன்றாக பிரிக்கப்படுவதால், கணக்குகள் முறையாக பராமரிக்க முடியும். நஷ்டம் எப்படி ஏற்படுகிறது என்பதை கணக்கிட முடியும். மின்வாரியத்தை மேம்படுத்த புது கடன், முதலீடுகளை எளிதாக பெற முடியும். வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் விரைவில் கிடைக்கும். பணியாளர்களுக்கோ, வாடிக்கையாளர்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. வழக்கமாக இயங்குவது போல மின்வாரிய அலுவலகம் இயங்கும். இவ்வாறு அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக