அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

சனி, 29 ஜனவரி, 2011

சுபாஷ் சந்திர போஸ்

நம் நாட்டை  200 ஆண்டு காலம் ஆண்டு அடிமைபடுத்திய  பிரிட்டீஷ்காரர்களை  எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஒப்பற்ற  இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 115 ஆவது  பிறந்த நாள் இன்று.(23. 01.2010).
 
அடிமைதனத்தை ஒழிப்பதற்கு அஹிம்சை போராட்டம் எவ்வளவு தூரம் உதவியதோ அதேபோல் நம் நாட்டில் நேதாஜி அவர்களின் ஆயுதம் ஏந்திய ராணுவம் அமைத்து போராடியதும் நமக்கு உதவியது. இந்திய விடுதலைக்கு போரடிய மாபெரும் தலைவரின் பிறந்த நாளில் அவரின் நினைவுகளில் அவர் ஆற்றிய எழுச்சி உரைகள்  சில.....

 ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை: 
 
அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி :"
மற்றொரு எழுச்சி உரை:"நமது சரித்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சிக்கலான வேளையில் உங்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் துவண்டுவிடாதீர்கள். உங்கள் உணர்வுகளை தளரவிடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் விதியில் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்தியாவை அடிமைத் தளையிலேயே வைத்திருக்கும் சக்தி இந்த உலகில் எதற்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல... விரைவில் இந்தியா விடுதலை பெறும். ஜெய்ஹிந்த்."
ஈடுஇணையற்ற மாபெரும்  தலைவரின் இந்த பிறந்த நாளில் புது சபதம் ஏற்போம்.நாட்டை நல்வழிபடுத்த உறுதுணையாக இருப்போம் என்று......
 
 
இந்தியா அழைக்கிறது : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!



"அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி :"
பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!
பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைத் தனையால் பிணைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 107 வது பிறந்த நாள் இன்று.
இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டத்தில், இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டிருந்த அன்றைய உலக சூழலை கருத்தில் கொண்டு, சர்வதேச சக்திகளின் துணையுடன் அன்னிய மண்ணில் களம் அமைத்து அவர் நடத்திய விடுதலை போர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கதிகலங்க அடித்தது.
அமைதியான, சாத்வக போராட்டங்களால் மட்டுமின்றி, ஆயுதம் தாங்கிய வீர வழியில் இந்தியாவிற்கு உள்ளேயும், இந்தியாவிற்கு வெளியேயும் இருந்து நடத்தப்பட்ட போராட்டங்களால் (போர்களால்) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிர்பந்தங்களால்தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்பதே வரலாறு நமக்கு காட்டிவரும் உண்மையாகும்.
இந்தியாவிற்கு இப்படியும் போராடத் தெரியும் என்பதை உலகத்திற்கு உணர்த்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்!



தனது 23-வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது சாத்வீக வழியில் போராடும் பாதையில் அடுத்த 20 ஆண்டுகளை செலவிட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இரண்டு முறை (41 வயதிலேயே) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் சாத்வீகம் வெள்ளையருக்கு புரியாத மொழி என்பதை புரிந்து கொண்ட சுபாஷ் சந்திர போஸ், 1941 -ஆம் ஆண்டு தன்னை வீட்டுச் சிறை வைத்திருந்த வெள்ளை அரசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கல்கட்டாவில் இருந்து தப்பினார்.
ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். இரண்டாம் உலகப்போர் நடந்து கொணடிருந்த அந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, ஜெர்மன்- இத்தாலி உதவியுடன் (ஹிட்லருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தோல்வியில் முடிந்துவிட்டது) ஆயுத போரை துவக்க திட்டம் வகுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக